ஆதியே துணை
பிரம்மோதய மெய்வழி சாலைஆண்டவர்கள் திருவாயுரை விரிப்பு:
" இறைவன் மனுக்களுக்கு வயது தந்ததின் பிரயோசனமாகியது மெய்ப்பாலரியவே !! "
" அரிக்கு முந்தின - அவ்வெழுத்துக்கு அப்பாலாய - அகர அச்சர பீடத்துக்
கோடாலங்கிர்தம் பிறந்குவதர்க்கு, இன்னது இன்னதென இன்னதுக்கு இன்னதென ஓர்வகை மூவகை ஐவகை எண்வகை பொறுப்பும் உள்ளத்துள்
உரிமையுற மெய்ப்பொருள் மெய்ப்பயன் மெய்யாக மெய்யாகவே எதிர் முகத்தில் வைத்து போதிக்கும் நவகிரகக் கோளரி வாளராகிய எதார்த்த ஓர் தேவகுரு இல்லாது கல்வி வீடுபதம் காண முடியாது."
" சர்வ உலகிலுமுள்ள மனுத்தலைகள் அவ்வளமும் எத்தனையோ வித விதமான ஜாதிகளாக இருக்கின்றன - அவைகள் ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறான எண்ண மிருக்கின்றன - ஆனால் அவைகழுக்காக இப்பூமிக்கு வந்த எல்லா வேதங்களும் ஒரே இறைவனால்தான் இறக்கப்பெட்றன - வேதங்களுக்குள் வேற்றுமை காணவே காணோமே - அப்படி இருக்க மனித இனத்திற்குள் இவ்வளவு வித்தியாசம் ஏன் ?"
"தன் மதத்தின் உண்மையை அறியாதவனுக்கு மற்றைய மதங்கள் எதிரியாகவே தோன்றும். எல்லா மதங்களையும் உண்டாக்கிய மூலபுருஷன் ஒரே இறைவன்தான். இறைவனின் அருட்சக்தியே அந்தந்தக் காலத்தில் அந்தந்த பாசையில் மனித தேகத்தில் புகுந்து நின்று மதத்தை உண்டாக்கியது. அந்த மதம் இந்த மனுத்தலைக்கு செய்யும் பிரயோசனம் நிகரற்றது. அதற்க்கு மேம்பட்ட பிரயோசனம் எதுவும் இல்லை."